Bajaj Dominar 400 : பஜாஜ் ஆட்டோவின் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் பவர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. டோமினார் 400 பைக்கின் பவர் 39.9 ஹெச்பி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2019 பஜாஜ் டோமினார் 400
கடந்த சில மாதங்களாக வெளியான டோமினார் 400 பைக்கின் பவர் தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்தும் வகையில், டாமினார் 400 பைக்கின் விவரக்குறிப்பு அடங்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
முந்தைய என்ஜின் பவர் 35 PS ஆக இருந்தது. ஆனால் தற்போது அதே 373 சிசி என்ஜின் மீண்டும் மூன்று ஸ்பார்க் பிளக்குகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டு பவர் 4.9 PS வரை அதிகரிக்கப்பட்டு , தற்போது 39.9 PS பவரினை 8650 ஆர்பிஎம் மூலம் வெளிப்படுத்துகின்றது. சிறப்பான வகையில் டார்க் சார்ந்த மேம்பாட்டை பெற்று 7000 ஆர்பிஎம்-ல் 35 Nm வழங்குகின்றது. டார்கில் மாற்றங்கள் இல்லை. அதே போல 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
முந்தைய மாடலை விட என்ஜின் ஆயில் 200 மில்லி அதிகரிக்கப்பட்டு, தற்போது 1.7 லிட்டர் ஆக உள்ளது. இந்த மாடலின் அளவுகளில் அகலம் 836 மிமீ அதிகரிக்கப்பட்டு, வாகனத்தின் எடை தற்போது 2.5 கிலோ வரை அதிகரித்து 184.5 கிலோ கிராமாக மாறியுள்ளது.
மேலும் இந்த பைக்கில் இரண்டு கிளஸ்ட்ட்கள் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. டோமினாரில் நவீன வசதியை பெற்ற டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், இரண்டாவது கிளஸ்ட்டராக எரிபொருள் கலனில் இணைக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். முன்பு உறுதிப்படுத்தியது போலவே இரு பிரிவை கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதனால் மிக நேர்த்தியான எக்ஸ்ஹாஸ்ட் சப்தம் வெளியிடும்.
புதிய டோமினார் 400 பைக்கில் கேடிஎம் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த சில வாரங்களில் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.