பஜாஜ் ஆட்டோவின், புதிய 2019 பஜாஜ் CT 110 பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 37,997 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை டூ வீலர்களில் ஒன்றாக பஜாஜின் சிடி 110 பைக் விளங்குகின்றது.
பஜாஜ் சிடி 110 பைக் மாடலின் ஸ்டைலிங் சார்ந்த அம்சங்கள் விற்பனைக்கு கிடைக்கின்ற சிடி 100 போன்றே அமைந்துள்ளது. குறிப்பாக இதன் பெட்ரோல் டேங்க் பக்கங்களில் புதிய கிராபிக்ஸ் மற்றும் ரப்பர் பேட்களை பெற்றுள்ளது. சக்கரங்கள், கைப்பிடி, கிராப் ரெயில், புகைப்போக்கி மற்றும் என்ஜின் பாகங்கள் போன்றவை கருப்பு நிறத்தை கொண்டுள்ளன.
இந்த பைக் மாடலில் இரட்டை பிரிவு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சுவிட்ச் கியர் உடன் கூடிய பாஸ் பட்டனைப் பெறுகிறது. இந்த பைக் மாடலில் மொத்தம் மூன்று விதமான நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் நீல ஸ்டிக்கிரிங், சிவப்பு நிறத்தில் ஸ்டிக்கரிங், மற்றும் மேட் ஃபினிஷ் ஆலிவ் க்ரீன் நிறத்தில் என கிடைக்கின்றது.
இந்த என்ஜின் பிளாட்டினா 110 பைக்கில் உள்ளதை பெற்றுள்ளது. இந்த என்ஜின் 115 சிசி ஆனது, 7000 ஆர்.பி.எம் சுழற்சியில் 8.6 பிஎஸ் பவரும், 5000 ஆர்.பி.எம்மில் 9.81 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 4 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை பக்க ஸ்பிரிங்-இன்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பொருத்தப்படுள்ளது. பஜாஜ் சிடி 110 பைக்கில் சிபிஎஸ் பிரேக் உடன் 130 மிமீ டிரம் பிரேக்குகளை கொண்டுள்ளது.
2019 பஜாஜ் CT 110 விலை
கிக் ஸ்டார்டர் சிடி 110 விலை ரூ. 37,997
கிக் ஸ்டார்டர் சிடி 110 விலை ரூ. 44,352
(எக்ஸ்-ஷோரூம்)