மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஹோண்டா CBR 250R பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ், பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் ஆகியவற்றை பெற்றிருப்பதுடன் 4 வித புதிய நிறங்களை பெற்றதாக ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விலை ரூ. 1.63 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
2018 ஹோண்டா CBR 250R
தோற்ற அமைப்பில் புதுவிதமான பாடி கிராபிக்ஸ் பெற்று முகப்பு அமைப்பில் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாக வந்துள்ள சிபிஆர் 250ஆர் பைக்கில் நான்கு விதமான கிரே-ஆரஞ்சு, கிரே-பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் அமைப்புகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாமல், பிஎஸ்-3 எஞ்சினுக்கு மாற்றாக மேம்படுத்தப்பட்ட 249.6 சிசி பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 26.5hp ஆற்றல் மற்றும் 22.9Nm இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
அப்சைடு ஃபோர்க்கினை முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டதாக வந்துள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் 296 மீமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. மேலும் இந்த பைக்கில் ஆப்ஷனாலாக டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக கிடைக்கின்றது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள இந்த பைக்கின் எடை 167 கிலோ ஆகும்.
2018 ஹோண்டா CBR 250R விலை பட்டியல்
CBR 250R STD – ரூ. 1.63 லட்சம்
CBR 250R ABS – ரூ. 1.94 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)