இந்தியாவின் 100-125சிசி வரையிலான இருசக்கர வாகன சந்தையில் விற்பனையில் உள்ள பல்வேறு மாடல்களில் முக்கிய மாடலாக விளங்கும் சிபி ஷைன் எஸ்பி மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் ரூ. 62,032 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி
புதுபிக்கப்பட்ட பெட்ரோல் டேங்கை பெற்றுள்ள புதிய 125சிசி ஷைன் எஸ்பி மாடலில் பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கருடன் , டிஜிட்டல் அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் கன்சோலை பெற்றிருக்கின்ற நிலையில், சர்வீஸ் இன்டிகேட்டர் மற்றும் கடிகாரம் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.
2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி மாடலில் 10.16 bhp பவர் மற்றும் 10.30 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.73 cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி நுட்பத்தினை கொண்டதாக வந்துள்ளது.
இந்த பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குறைந்த பாரமரிப்பு கொண்ட டிரைவ் செயின் சாதாரன செயினை விட 1.6 மடங்கு கூடுதலான தரத்தை கொண்டதாக வந்துள்ளது. 18 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு 130 மிமீ டிரம் பிரேக் , 240 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிபிஎஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி விலை பட்டியல்
CB Shine 125 SP Drum – Rs. 62,032
CB Shine 125 SP Disc – Rs. 64,518
CB Shine 125 SP CBS – Rs. 66,508