ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட 2018 ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் (CB Hornet 160R) பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உட்பட எல்இடி ஹெட்லைட் மற்றும் புதிய கிளஸ்ட்டரை பெற்று ரூ. 83,675 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2018 ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் 150-160சிசி வரையிலான சந்தையில் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் ஹார்னெட் 160 பைக்கில், மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்ற பைக் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹார்னெட் மாடல் பல்சர் 160, பல்சர் 150, ஜிக்ஸெர் , டிவிஎஸ் அப்பாச்சி 160, யமஹா FZ சமீபத்தில் இந்நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா எக்ஸ்-பிளேடு போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்த பைக் விளங்குகின்றது.
முந்தைய சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் உள்ள இன்ஜினை பெற்று 14.90 ஹெச்பி பவருடன், டார்க் 14.50 என்எம் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.
2018 Honda CB Hornet 160R Specifications
என்ஜின் | 162.71 சிசி |
ஆற்றல் | 14.90 பிஹெச்பி @ 8500 rpm |
டார்க் | 14.50 என்எம் @ 6500 rpm |
கியர்பாக்ஸ் | 5 வேகம் – 1-N-2-3-4-5 |
மைலேஜ் | 58.95 Kmpl (ARAI) |
டாப் ஸ்பீடு | 110கிமீ |
நீxஅxஉ | 2041X783X1067 மிமீ |
டேங்க் | 12 லிட்டர் |
வீல்பேஸ் | 1345மிமீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 164மிமீ |
முன் டயர் | 100/80-17 |
பின் டயர் | 140/70-17 |
முன் பிரேக் | டிஸ்க் 276மிமீ |
பின் பிரேக் | டிரம் 130 மிமீ / டிஸ்க் 220மிமீ |
ஏபிஎஸ் | சிங்கிள் சேனல் ஏபிஎஸ் |
முன் சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் |
பின் சஸ்பென்ஷன் | மோனோசாக் |
புதிய ஹார்னெட் 160 ஆர் பைக்கில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், ஸ்டைலிஷான கிளஸ்ட்டர் உட்பட மிக நேர்த்தியான கட்டமைப்பினை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றது. புதிய ஹோண்டா ஹார்னெட் 160 ஆர் மாடலில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் உட்பட கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது.
ஏபிஎஸ் என்றால் என்ன ?
ஏபிஎஸ் இயக்கம்
ஏபிஎஸ் (பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு) ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. அதனால் சரியாக செயல்படும். பிரேக் பிடித்தவுடன் முழுமையாக சக்கரங்களை தாக்காது. ஆனால் சக்கரங்களை விட்டு விட்டு பிடிக்கும் இதனால் வேகம் இயல்பான கட்டுபாட்டுக்குள் வரும்.
2018 ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிரம் – ரூ.83,675
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிஸ்க் CBS – ரூ.88,175
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R ABS STD – ரூ.89,175
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R ABS DLX – ரூ.91,675
{அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் }