முதலில் வரும் 50 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அட்வென்ச்சர் ரக ரூ.13.23 லட்சத்தில் 2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் சிறப்பு சலுகையாக மோட்டோ ஜிபி ரேஸ் பந்தையத்தை காண்பதற்கான வாய்ப்பை ஹோண்டா வழங்குகின்றது. இந்தியாவில் உள்ள 22 ஹோண்டா விங் வோர்ல்ட் டீலர்களிடம் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது.
2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன்
முந்தைய மாடலை விட கூடுதலான வசதிகளை கொண்டதாக வெளியாகியுள்ள ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக் ரூ. 33,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. பல்வேறு புதிய அம்சங்களை பெற்றுள்ள புதுப்பிக்கப்பட்ட 2018 மாடலில் ரைட் பை வயர், 7 விதமான அமைப்பினை பெற்ற Honda Selectable Torque Control , அர்பன், டூர் மற்றும் கிராவல் மூன்று விதமான ரைடிங் மோடினை பெற்று விளங்குகின்ற இந்த மாடலில் அர்பன் மோட் என்பது நகர்புற பயன்பாட்டிற்கும், டூர் என்பது நீண்ட நெடுஞ்சாலை பயணத்துக்கும், கிராவல் மோட் என்பது ஆஃப் ரோடு சார்ந்த பயணங்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.
கூடுதலாக யூஸர் மோட் என்பதனை மோட்டார்சைக்கிள் உரிமையாளர் தங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் பவர், எஞ்சின் பிரேக்கிங் போன்றவற்றை அமைத்துக் கொள்ளலாம். புதிய மாடலில் எஞ்சின் சார்ந்த மாற்றங்கள் இடம்பெறவில்லை.
89hp பவர் மற்றும் 93.1Nm இழுவைத் திறனை வழங்கும் திரவத்தால் குளிர்விக்கும் வகையிலான பேரலல் ட்வீன் 998 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6 வேக டிசிடி ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கின்றது.
2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விலை ரூ. 13.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)