இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் , புதுப்பிக்கப்பட்ட 2018 யமஹா FZ-S FI பைக் மாடல் ரூ.86,042 விலையில் விற்பனைக்கு இந்தியா சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடல் பின்புற டிஸ்க் பிரேக் உடன் சந்தைக்கு வந்துள்ளது.
2018 யமஹா FZ-S FI
இந்தியாவின் 150 சிசி -160 சிசி சந்தையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரசத்திபெற்ற மாடலாக விளங்கும் யமஹா எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக்கில் 13 பிஎச்பி ஆற்றல், 12.8 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 149cc ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தும் புளூ கோர் டெக்னாலாஜி பெற்றதாக வந்துள்ளது.
புதிய யமஹா FZ-S FI பைக்கில் பின்புற டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு , புதிய பின்புற பார்க்கும் கண்ணாடி, புதிய அலாய் வீல் டிசைன் ஆகியவற்றுடன் புதிதாக நீல நிறம் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் 282 டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உடன் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்படவில்லை.
முந்தைய மாடலை விட ரூ.3000 விலை கூடுதலாக அதிகரிக்கப்பட்டு 2018 யமஹா FZ-S FI பைக் ரூ.86,042 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.