இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், புதிய நீல நிறத்தை பெற்ற கவாஸாகி நின்ஜா 650 ஏபிஎஸ் மாடல் ரூ.5.33 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய கருப்பு நிற மாடலை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.
2018 கவாஸாகி நின்ஜா 650
தோற்றம்,வசதிகள் மற்றும் எஞ்சின் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் சந்தைக்கு வந்துள்ள நின்ஜா 650 ஏபிஎஸ் மாடலில் 68 ஹெச்பி ஆற்றல் , 65.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முந்தைய கருப்பு நிற நின்ஜா 650 மாடல் சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது புதிய நீல நிறம் நீக்கப்பட்ட நிறத்தை விட மிக சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
முன்புற டயரில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் 300 மிமீ டிஸ்க் பிரேக் , பின்புற டயரில் பேக்லிங்க் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
2018 கவாஸாகி நின்ஜா 650 பைக் ரூ.5.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)