இந்தியாவில் ரூ.7.30 லட்சம் விலையில் புதிய ஹோண்டா CBR650F பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட மேம்ம்பட்ட அம்சங்களை பெற்றதாக பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா CBR650F பைக்
கடந்த வருடம் நடைபெற்ற EICMA 2016 அரங்கில் வெளியான மேம்பட்ட சிபிஆர் 650எஃப் பைக் மாடல் தற்போது இந்தியாவில் உள்ள 22 நகரங்களில் அமைந்துள்ள ஹோண்டா விங் டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
முந்தைய எஞ்சினை விட சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் வகையில் மேம்பட்ட 650சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 85.42 BHP குதிரை திறன் மற்றும் 60.5 Nm டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முந்தைய வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது. CBR1000RR ஃபயர்பிளேட் மாடலின் வடிவ அம்சங்களை பெற்றதாக புதிய சிபிஆர் 650எஃப் அமைந்துள்ளது. எல்இடிமுகப்பு விளக்குகளுடன் கூர்மையான ஃபேரிங் பேனல்களை பெற்றுள்ளது. சிவப்பு மற்றும் புதிய கருப்பு மெட்டாலிக் கன்பவுடர் ஆகிய இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.
41 mm கொண்ட Showa Bending Valve ஃபோர்க்குளை பெற்றதாகவும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள புதிய பைக்கில் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் கொண்ட 320மிமீ பிரேக் பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது.
2017 ஹோண்டா CBR650F பைக் விலை ரூ.7.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)