பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடுக்கு ஏற்ற என்ஜினை பெற்ற புதிய 2017 பஜாஜ் டிஸ்கவர் 125 பைக் ரூ.50,559 விலையில் விற்பனைக்கு வந்ததுள்ளது. டிஸ்கவர் 125 பைக் லிட்டருக்கு 82.4 கிமீ மைலேஜ் தரவல்லதாக விளங்குகின்றது.
பஜாஜ் டிஸ்கவர் 125
மேம்படுத்தப்பட்ட புதிய டிஸ்கவர் 125 பைக்கில் முந்தைய என்ஜின் ஆற்றலில் மாற்றம் இல்லாமல் 11 PS ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 124.2சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.8 Nm ஆகும். இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும்.
முன்புற டயரில் 200மிமீ டிஸ்க் பிரேக் , பின்புற டயரில் டிரம் பிரேக் ஆப்ஷனுடன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்குகள் பின்புறத்தில் ட்வின் சாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்ற இந்த மாடலில் கருப்பு , சிவப்பு , நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் சிவப்பு கிராபிக்ஸ் போன்ற 4 வண்ணங்களை பெற்று விளங்குகின்றது.
புதிய 2017 டிஸ்கவர் 125 பைக்கின் BSIV மாடலின் ஆரம்ப விலை ரூ. 50,559 மற்றும் டாப் வேரியன்ட் ரூ. 52,559 ஆகும். (எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை)