இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 125cc பைக்குகளில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர்களை தவிர்த்து பைக்குகள் மட்டும் இங்கு பட்டியிலடப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர் 125, கேடிஎம் டியூக் 125, கேடிஎம் ஆர்சி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, பஜாஜ் ஃப்ரீடம் 125, ஹீரோ கிளாமர், ஹோண்டா ஷைன், ஹோண்டா SP 125, டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் N125, கீவே எஸ்ஆர் 125 மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் போன்ற 125cc பைக்குகளின் என்ஜின் மற்றும் மைலேஜ் உட்பட தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை இங்கே காணலாம்.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.
2025 Hero Xtreme 125R
இந்தியாவின் 125சிசி சந்தையில் உள்ள மாடல்களில் குறைந்த விலையில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடலாக விளங்குவதுடன் மிக வேகமான எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக கிடைக்கின்றது.
Hero Xtreme 125R | |
Engine Displacement (CC) | 125 cc Air-cooled |
Power (PS@rpm) | 11.5 PS @ 8250 rpm |
Torque (Nm@rpm) | 10.5 Nm @ 60 rpm |
Gear Box | 5 Speed |
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,21,654 முதல் ₹ 1,30,895 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
- Xtreme 125R IBS – ₹ 1,21,654
- Xtreme 125R ABS- ₹ 1,30,895
2025 Honda SP 125 price
125சிசி சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் ஒன்றான ஹோண்டா SP 125 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவ்விட்டி வசதியுடன் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு ஆப்ஷனை பெற்றுள்ளது.
Honda SP 125 | |
Engine Displacement (CC) | 123.94 cc Air-cooled |
Power (PS@rpm) | 10.8 PS @ 7500 rpm |
Torque (Nm@rpm) | 11 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2025 ஹோண்டா SP125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,15,098 முதல் ₹ 1,25,796 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
- SP125 OBD2B Drum – ₹ 1,15,098
- SP125 OBD2B Disc – ₹ 1,25,796
2025 Bajaj Pulsar 125 Price
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பைக் வரிசையில் பல்சர் 125 மாடல் முன்னிலையாக உள்ளது. 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு கார்பன் ஃபைபர் எடிசன் மற்றும் நியான் எடிசன் என இரண்டாக விற்பனை செய்யப்பட்டு ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பிளிட் இருக்கை என இரு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Bajaj Pulsar 125 | |
Engine Displacement (CC) | 124.4 cc |
Power (PS@rpm) | 11.8 PS @ 8500 rpm |
Torque (Nm@rpm) | 10.8 Nm @ 6500 rpm |
Gear Box | 5 Speed |
2025 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,03,546 முதல் ₹ 1,19,765 வரை மாறுபடும்.
- Neon Single Seat – ₹ 1,03,546
- Carbon Fibre Single seat – ₹ 1,13,421
- Carbon Fibre Split seat – ₹ 1,19,765
2025 TVS Raider Price
விற்பனைக்கு வந்த முதலே அமோகமான வரவேற்பினை பெற்ற ஸ்டைலிஷான டிவிஎஸ் ரைடர் 125சிசி பைக்கில் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் சேர்க்கப்பட்டு பல்சர், கிளாமர் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை டிவிஎஸ் ஏற்படுத்தியுள்ளது.
TVS Raider 125 | |
Engine Displacement (CC) | 125 cc air cooled |
Power (PS@rpm) | 11.3 PS @ 7500 rpm |
Torque (Nm@rpm) | 11.2 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2025 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,07,654 முதல் ₹ 1,33,974 வரை மாறுபடும்.
- Raider Drum – ₹ 1,07,654
- Raider Single seat – ₹ 1,16,397
- Raider Split seat – ₹ 1,20,403
- Raider iGo – ₹ 1,23,654
- Raider SSE – ₹ 1,28,097
- Raider SX – ₹ 1,33,974
2025 Bajaj Pulsar NS125 Price
ஸ்டைலிஷான தோற்ற வடிவமைப்பினை கொண்ட 2025 பல்சர் என்எஸ் 125 பைக்கில் எல்இடி ஹெட்லைட், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கொண்டு ஸ்பிளிட் இருக்கையுடன் 125சிசி என்ஜினை பெற்றுள்ளது.
Bajaj Pulsar NS125 | |
Engine Displacement (CC) | 124.45 cc |
Power (PS@rpm) | 12 PS @ 8500 rpm |
Torque (Nm@rpm) | 11 Nm @ 7000 rpm |
Gear Box | 5 Speed |
2025 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,32,876 வரை உள்ளது.
2025 Honda CB Shine
125சிசி சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் முதன்மையான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற கம்யூட்டர் மாடலாகும்.
Honda CB Shine 125 | |
Engine Displacement (CC) | 123.94 cc Air-cooled |
Power (PS@rpm) | 10.8 PS @ 7500 rpm |
Torque (Nm@rpm) | 11 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2025 ஹோண்டா CB Shine 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,04,905 முதல் ₹ 1,08,890 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
- CB Shine 125 Drum – ₹ 1,04,905
- CB Shine 125 Disc – ₹ 1,08,890
2025 Hero Super Splendor & Xtech
நீண்ட காலமாக விற்பனையில் உள்ள ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரு ஆப்ஷன்களையும் பெற்று விற்பனைக்கு கிடைக்கின்றது. கூடுதலாக இந்த மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் எக்ஸ்டெக் வேரியண்ட் உள்ளது.
Hero Super Splendor 125 | |
Engine Displacement (CC) | 124.7 cc |
Power (PS@rpm) | 10.8 PS @ 7500 rpm |
Torque (Nm@rpm) | 10.6 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2025 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 99,943 முதல் ₹ 1,06,765 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
- Super Splendor Drum – ₹ 99,943
- Super Splendor Disc – ₹ 1,04,321
- Super Splendor Xtec Drum – ₹ 1,02,543
- Super Splendor Xtec Disc – ₹ 1,06,765
2025 Bajaj Pulsar N125
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் மற்றொரு 125சிசி பைக் மாடலான பல்சர் என்125 எல்இடி ஹெட்லைட், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் கூடிய கிளஸ்ட்டருடன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொண்டு பின்புறத்தில் டிரம் பிரேக் வசதியை பெற்றுள்ளது.
Bajaj Pulsar N125 | |
Engine Displacement (CC) | 124.58 cc |
Power (PS@rpm) | 12 PS @ 8500 rpm |
Torque (Nm@rpm) | 11 Nm @ 00 rpm |
Gear Box | 5 Speed |
2025 பஜாஜ் பல்சர் N125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,12,876 – ₹ 1,16,654 வரை உள்ளது.
- N125 LED DISC – ₹ 1,12,876
- N125 LED DISC BT – ₹ 1,16,654
2025 Hero Glamour & Glamour Xtec
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் பைக்கில் கிளாமர், கிளாமர் எக்ஸ்டெக், என விதமாக கிடைக்கின்றது. கிளாமர் Xtec வேரியண்டில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஹீரோ வழங்குகின்றது. பொதுவாக இந்த மூன்று மாடல்களிலும் ஒரே என்ஜின் பயன்படுத்தப்படுகின்றது.
Hero Glamour 125 | |
Engine Displacement (CC) | 124.7 cc |
Power (PS@rpm) | 10.8 PS @ 7500 rpm |
Torque (Nm@rpm) | 10.6 Nm @ 6000 rpm |
Gear Box | 5 Speed |
2025 ஹீரோ கிளாமர், கிளாமர் Xtec, கிளாமர் மாடல்கள் ஆன்ரோடு விலை ₹ 1,03,543 முதல் ₹ 1,18,976 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
- Glamour 125 Drum – ₹ 1,03,543
- Glamour 125 Disc – ₹ 1,08,543
- Glamour 125 Xtec Drum – ₹ 1,12,876
- Glamour 125 Xtec Disc – ₹ 1,18,976
2025 KTM 125 Duke
125சிசி சந்தையில் கிடைக்கின்ற ஸ்டைலிஷான மற்றும் பவர்ஃபுல்லான ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக கேடிஎம் நிறுவனத்தின் 125 டியூக் விளங்குகின்றது. குறைந்த விலையில் டியூக் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.
KTM 125 Duke | |
Engine Displacement (CC) | 124.7 cc liquid-cooled DOHC |
Power (PS@rpm) | 14.5 PS @ 9250 rpm |
Torque (Nm@rpm) | 12 Nm @ 8000 rpm |
Gear Box | 5 Speed |
2025 கேடிஎம் 125 டியூக் பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 2,16,033 ஆகும்.
2025 KTM RC125 Price
இந்தியாவின் 125சிசி சந்தையில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற ஆர்சி 125 பைக்கின் எடை 160 கிலோ ஆகும். டியூக் 125 மற்றும் ஆர்சி 125 ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன.
KTM RC125 | |
Engine Displacement (CC) | 124.7 cc liquid-cooled DOHC |
Power (PS@rpm) | 14.5 PS @ 9250 rpm |
Torque (Nm@rpm) | 12 Nm @ 8000 rpm |
Gear Box | 5 Speed |
2025 கேடிஎம் RC125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 2,27,533 ஆகும்.
Bajaj Freedom 125 CNG
உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என அறியப்படுகின்ற பஜாஜ் ஆட்டோவின் ஃப்ரீடம் 125சிசி என்ஜின் கொண்ட மாடலாக விளங்கும் பைக்கில் 2 கிலோ சிஎன்ஜி எரிபொருள் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் கொண்டு அதிகபட்சமாக 330 கிமீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. gnடிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு ஆப்ஷனையும் பெற்றிருக்கின்றது.
2025 Bajaj Freedom 125 | |
Engine Displacement (CC) | 124.4 cc |
Power (PS@rpm) | 9.5 PS @ 8000 rpm |
Torque (Nm@rpm) | 9.7 Nm @ 500 rpm |
Gear Box | 5 Speed |
2025 பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,05,890 முதல் ₹ 1,30,654 வரை அமைந்துள்ளது.
- NG04 Drum – ₹ 1,05,890
- NG04 Drum LED – ₹ 1,11,986
- NG04 Disc LED – ₹ 1,30,654
Keeway SR 125
125சிசி சந்தையில் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மாடலாக விளங்கும் 2025 கீவே எஸ்ஆர் 125 பைக்கில் வட்ட வடிவ ஹெட்லைட்கொண்டு ரெட்ரோ நிறங்கள் பயன்படுத்தப்பட்டு 125சிசி சந்தையில் கிடைக்கின்றது.
Keeway SR 125 | |
Engine Displacement (CC) | 125 cc Air-cooled SOHC |
Power (PS@rpm) | 9.7 Ps @ 9000 RPM |
Torque (Nm@rpm) | 8.2 Nm @ 7500 RPM |
Gear Box | 5 Speed |
2025 கீவே SR 125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,40,633 ஆகும்.
Last Updated – 02-02-2025