ஹோண்டா நவி மினி பைக் உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா கிளிக் (CliQ) மாடலுக்கு இடையில் ஒப்பீட்டு பார்த்து இரு மாடல்களில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஹோண்டா கிளிக் Vs ஹோண்டா நவி – ஒப்பீடு
இரு மாடல்களுமே இந்தியாவின் ஹோண்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் இந்திய மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிசைன்
மினி பைக் வகையில் வித்தியாசமான கட்டுமானத்துடன் வந்த முதல் மாடலான நவி நகர மக்கள மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதே மாடலின் வடிவ உந்துதலில் முழுமையான ஸ்கூட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா க்ளிக் கூடுதலான பல வசதிகளுடன் வந்துள்ள குறிப்பிடதக்க அம்சமாகும்.
நவி மாடலை விட க்ளிக் கூடுதலான பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், ஊரக பகுதிகளுக்கு ஏற்ற அம்சங்களான பிலாக் பேட்டர்ன் டயர்கள், அகலமான ஃபுளோர் வசதி போன்றவற்றுடன் மிக முக்கியமாக சுமை தாங்கும் வகையிலான கேரியரை பின்புறத்தில் ஆப்ஷனலாக இணைத்துள்ளது.
நவி மாடலில் ஸ்டோரேஜ் பாக்ஸ் எனும் வசதி முன்புறத்தில் கூடுதலான ஆப்ஷனலாக வழங்கப்பட்டிருக்கும். க்ளிக் ஸ்கூட்டர் மாடலில் இருக்கை அடியில் 14 லிட்டர் கொள்ளவு பெற்ற ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சின் விபரம்
இரு மாடல்களிலும் ஹெச்இடி நுட்பத்துடன் கூடிய ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 110சிசி எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இரு எஞ்சின்களின் ஒப்பீடு அட்டவனை பின் வருமாறு ;-
நுட்பம் | ஹோண்டா கிளிக் | ஹோண்டா நவி |
---|---|---|
எஞ்சின் சிசி | 109.2 cc | 109.2 cc |
ஆற்றல் | 8 bhp at 7,000 rpm | 7.83 bhp at 7,000 rpm |
டார்க் | 8.94 Nm at 5,500 rpm | 8.96 Nm at 5,500 rpm |
கியர்பாக்ஸ் | சிவிடி | சிவிடி |
எரிபொருள் கலன் | 3.5 லிட்டர் | 3.8 லிட்டர் |
எடை | 102 கிலோ | 101 கிலோ |
விலை (எக்ஸ்-ஷோரூம் சென்னை) | ரூ.44,524 | ரூ. 43,523 |
நவி Vs கிளிக்
நவி மினி பைக்கை விட கூடுதலான வசதிகள் மற்றும் இடவசதி பல்வேறு ஆப்ஷன்களை கொண்டிருக்கின்ற க்ளிக் மாடல் நவியை விட சிறப்பான தேர்வாக அமைகின்றது. கிளிக் அறிமுகத்தின் முக்கிய நோக்கமே தொடக்கநிலை மோட்டார் சைக்கிள் சதந்தையில் உள்ள பைக்க்களுக்கும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் ஊரக பகுதி மற்றும் வளரும் நகரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தாலும் பெரும்பாலான ஸ்கூட்டர்கள் ஒரே தோற்ற அமைப்பில் இருந்து வருகின்ற நிலையில் இவற்றுக்கு மாற்றான வடிவத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இந்த ஸ்கூட்டர் அமையலாம்.
விலை
இருமாடல்களுக்கு சென்னை எக்ஸ-ஷோரூம் விலையில் ரூ.1000 வரை வித்தியாசம் இருந்தாலும் கூடுதல் வசதிகள் ஸ்கூட்டர் போன்ற அமைப்பு என பெற்றுள்ளதால் நவி மாடலை விட கூடுதலான ஈர்ப்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா நவி – ரூ. 43,523
ஹோண்டா கிளிக் – ரூ. 44,524
உங்கள் சாய்ஸ் என்ன மறக்காமல் கமென்ட்ஸ் பன்னுங்க..!