இந்தியாவில் கம்பீரமான பைக் என்றால் ராயல் என்ஃபீல்டு மட்டும்தான் என்ற காலம் மாறி வருகிறது. அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை தொடர்ந்து மேலும் ஒரு அமெரிக்காவின் க்ருஸர் பைக் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ள நிறுவனமும் களமிறங்குகிறது.
அமெரிக்காவின் விக்டோரி மோட்டார் சைக்கிள் நிறுவனம் வருகிற 2013 ஆம் ஆண்டில் தன்னுடைய பைக்கினை களமிறக்கலாம். விக்டோரிய நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் ATV வாகனங்களை தயாரிக்கும் போலாரீஸ் ஆகும்.
2012 ஆம் ஆண்டிலே விக்டோரி(victory bike) பைக் இந்தியாவிற்க்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது மோட்டார் சைக்கிள் CBU ஆக இந்தியாவிற்க்கு வரும் என்பதால் சற்று விலை கூடுதலாக இருக்கும்.