டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அமெரிக்காவின் புகழ்பெற்ற யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரெனிகேட் கிளாசிக் , ரெனிகேட் கமாண்டோ , ரெனிகேட் ஸ்போர்ட் S என மொத்தம் 3 யூஎம் ரெனேகேட் சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
மூன்று மாடல்களிலும் 25 bhp திறன் மற்றும் 27,8Nm டார்க் வழங்கும் 279cc சிங்கிள் சிலிணடர் வாட்டர் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. தோற்றங்களில் மட்டுமே மூன்று மோட்டார்சைக்கிளும் வித்தியாசப்படுகின்றன.
யூஎம் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்
- யூஎம் ரெனிகேட் கிளாசிக் – ரூ. 1.69 லட்சம்
- யூஎம் ரெனிகேட் கமாண்டோ – ரூ.1.59 லட்சம்
- யூஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ. 1.49 லட்சம்
{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }
மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் சிறிய அளவில் தோற்ற மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளன. ஸ்போர்ட் எஸ் மாடல் மிகவும் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை வழங்கும் ஹெட்லைட் க்வுல் பேனல் பக்கவாட்டு வியூ போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.
முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பினை கொண்டுள்ளது. முன்புறத்தில் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் யுஎம் குளோபல் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் லோகி ஆட்டோ நிறுவனத்துடன் சேர்ந்து உத்திராகாண்ட மாநிலத்தில் யுஎம் பைக்குகளை உற்பத்தி செய்ய உள்ளன.
[envira-gallery id="7143"]