Yamaha R15 Version 2.0 Streaking Cyan colour |
கடந்த 2008 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ஒய்இசட்எப் ஆர்15 பைக் 2011 ஆம் ஆண்டில் 2.0 வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்த புதிய வண்ணங்கள் இணைக்கப்பட்டது . தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ள சிறப்பு எடிசனில் ஜிபி நீளம் மற்றும் ஸ்ட்ரீக்கிங் சியான் கலர்களில் வந்துள்ளது.
என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 150சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 16.7எச்பி மற்றும் 15என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பநன்படுத்தப்பட்டுள்ளது.
18-24 வயதில் உள்ள இளம் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.
|
மொத்தம் 6 வண்ணங்களில் ஆர்15 2.0 வெர்சன் கிடைக்கும். முந்தைய வண்ணங்களான ரேசிங் பூளூ , கிரிட் கோல்டு , ரேரீங் பூளூ , மற்றும் இன்வின்சிபிள் பிளாக். மேலும் ஜிபி நீளம் மற்றும் ஸ்ட்ரீக்கிங் சியான் ஆகியவை புதிதாகும்.
முந்தைய மாடல்களின் விலையில் மாற்றம் இல்லை ஆனால் புதிய வண்ணங்களை விலை உயர்வு பெற்றுள்ளது.
யமஹா ஆர்15 V2.0 பைக் விலை (ex-showroom Delhi)
யமஹா ஆர்15 – ரூ. 1,10,003 லட்சம் ( கலர் ரேசிங் பூளூ, ரேரீங் பூளூ , மற்றும் இன்வின்சிபிள் பிளாக்)
யமஹா ஆர்15 – ரூ. 1,12,924 லட்சம் ( கலர் கிரிட் கோல்டு)
யமஹா ஆர்15 – ரூ. 1,17,260 லட்சம் ( கலர் ஜிபி நீளம் மற்றும் ஸ்ட்ரீக்கிங் சியான்)
Yamaha R15 V2.0 bike get two new colours