மிகவும் ஸ்டைலிசான யமஹா ஆர்15 V2.0 பைக்கில் புதிய வண்ணங்களை சேர்த்து விலையை உயர்த்தி புதிய யமஹா ஆர்15 பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எவ்விதமான மெக்கானிக்கல் மற்றும் தோற்ற டிசைன் மாற்றங்கள் இல்லாமல் புதிய வண்ணங்களாக ரெவிங் நீலம் , ஸ்பார்கி கீரின் மற்றும் அட்ரனாலைன் சிவப்பு என மொத்தம் மூன்று புதிய கலர்கள் இணைக்கப்பட்டு இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.
17 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 149cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 15 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
ஸ்பீளிட் இருக்கைகளுடன் விளங்கும் ஆர்15 பைக்கின் இருபக்கங்களிலும் டிஸ்க் பிரேக் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் ரியர் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.
முந்தைய மாடலை விலை ரூ.4252 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை போல இரண்டு விலை அல்லாமல் யமஹா R15 பைக்கின் புதிய விலை ரூ.1.18,373 ஆகும். (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)