இந்தியாவின் யமஹா டூ வீலர் நிறுவனம் புதிய யமஹா ஸ்கூட்டர் மாடல் ஒன்றை சென்னை அருகில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யமஹா ஃபேசினோ சாயிலில் இந்த ஸ்கூட்டர் அமைந்துள்ளது.
புதிய யமஹா ஸ்கூட்டர்
யமஹா நிறுவனத்தின் ஸ்கூட்டர் சந்தை சிறப்பான வளர்ச்சி பெற்று வருகின்ற யமஹா ஃபேசினோ மாடல் உள்பட ஆல்ஃபா , ரே இசட் மற்றும் ரே இசட் ஆர் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஆல்ஃபா மாடலை தவிர மற்றவைகள் சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
யமஹாவின் நான்கு ஸ்கூட்டர் மாடல்களுமே 7.1 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 113சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 110சிசி சந்தைக்கு ஏற்ற மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதிதாக சென்னையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட யமஹா ஸ்கூட்டரின் படங்களை பைக்அட்வைஸ் தளம் தனது வாசகர் ஒருவரின் வாயிலாக வெளியிட்டுள்ளது.
பின்புற தோற்ற அமைப்பின் சில பகுதிகள் மட்டுமே காட்சியளிக்கின்ற இந்த சாலை சோதனை ஓட்ட ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் இடம்பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் உற்பத்தி தொடங்கப்பட உள்ள யமஹா ஃபேஸர் 25 பைக் விற்பனைக்கு செப்டம்பர் மாதம் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே காலகட்டத்தில் இந்த புதிய ஸ்கூட்டர்மாடலும் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீங்களும் இது போன்ற சோதனை ஓட்ட வாகனங்களை கண்டால் படம் பிடித்து அனுப்பி வையுங்கள்.. அனுப்பி வைக்க வேண்டிய முகவரி admin @ automobiletamilan.com