ரூ.1.20 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா FZ25 பைக்கின் அடிப்படையில் உருவாகி வரும் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட யமஹா ஃபேஸர் 250 பைக் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
யமஹா ஃபேஸர் 250 பைக்
நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற எஃப்இசட் 25 பைக்கின் அடிப்படையிலே முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள பேஸர் 250 பைக்கிலும் அதே யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் Fazer 250 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.
வருகின்ற பண்டிகை காலத்துக்கு முன்தாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஃபேஸர் 250 பைக் மாடல் சாதாரன மாடலை விட ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கலாம், எனவே யமஹா ஃபேஸர் 250 விலை ரூ. 1.38 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படங்கள் உதவி — > facebook.com/notheastbikingcommunity