இந்தியாவின் விலை குறைவான மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பஜாஜ் CT100B பைக் பெற்றுள்ளது. பஜாஜ் சிடி100பி பைக் ரூ.30,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள இருசக்கர வாகனங்களில் மிக குறைவான விலையுடன் வந்துள்ள சிடி100 பி பைக்கில் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. விலை மட்டுமல்லாமல் மைலேஜிலும் அசத்துகின்றது.
- பஜாஜ் சிடி100 பி பைக் விலை ரூ . 30,990 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)
- பஜாஜ் சிடி100 பி பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 99.1 கிமீ ஆகும்.
- சிடி100 பைக்கினை அடிப்படையாக கொண்ட மாடலாக சிடி 100 பி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சிடி 100 பைக்கில் உள்ள அதே என்ஜினை பெற்றிருந்தாலும் சிடி 100 பி பைக் மாடல் என்ஜின் சிறப்பான மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- CT100 பைக்கை விட கூடுதல் நீளமான இருக்கையை வழங்கப்பட்டுள்ளது.
- இரண்டு வருட வாரண்டி
- 4 வண்ணங்களில் கிடைக்கும்.
- ஹெச்எஃப் டான் பைக்கினை விட மிக குறைவான விலையில் சிறப்பான மைலேஜ் தரும் பைக்காக விளங்குகின்றது.
- 8.2 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 99.72 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார் 8.05 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
- மிக குறைவான விலையில் மிக சவாலான பஜாஜ் CT100B பைக் மாடலாக வந்துள்ளது