ரூ.43,762 விலையில் புதிய பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்ட்க் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான சொகுசு தன்மையை தரும் வகையில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பினை பிளாட்டினா பெற்றுள்ளது.
பிளாட்டினா ES மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்துள்ள பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கில் ஒரு லிட்டருக்கு 104 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்ல 8.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 102சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் இழுவைதிறன் 8.6 Nm ஆகும். இதில் 4 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதுகுவலியை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள கம்ஃபோர்டெக் நுட்பத்தில் 22 சதவீத கூடுதல் நீளம் கொண்ட முன்பக்க சஸ்பென்ஷன் , மற்றும் 28 சதவீத கூடுதல் சஸ்பென்ஷன் தன்மையை வெளிப்படுத்தும் பின்புற சஸ்பென்ஷன் , 100சிசி பைக்குகளுடன் ஒப்பீடுகையில் 20 சதவீத கூடுதல் சொகுசு தன்மையை குண்டு குழியும் நிறைந்த சாலைகளிலும் வழங்கும் , ரப்பர் ஃபூட் பேட் , மேலும் புதிய இருக்கை அகலமாக சொகுசுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ 100சிசி பிரிவில் உள்ள பைக்குகளுடன் ஒப்பீட்டு தகவலை வெளியிட்டுள்ளது.
பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக் விலை
1. பிளாட்டினா 100 Alloy ES – ரூ. 43,762
2. பிளாட்டினா 100 Alloy ES – ரூ. 45,811 (எலக்ட்ரிக் ஸ்டார்ட்)
( தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை )
பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கில் சிவப்பு ,கருப்பு மற்றும் நீளம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.