ட்ரையம்ஃப் டைகர் XR பைக் |
ட்ரையம்ஃப் டைகர் XR பைக்கில் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தினை பெற முடியும். அட்வென்ச்சர் ரக ட்ரையம்ஃப் டைகர் XR பைக்கினை , இந்தியாவில் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுகின்றது.
டைகர் எக்ஸ்ஆர் பைக்கில் 94எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3 சிலிண்டர் கொண்ட 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 79என்எம் ஆகும்.
ட்ரையம்ஃப் டைகர் XR பைக்கில் தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ள கூடிய ஏபிஎஸ் பிரேக் மற்றும் டிராக்ஷன் கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது.
4 விதமான த்ராட்டில் மேப் ஆப்ஷனை பெற்றுள்ளது. அவை ரோடு , மழை , ஸ்போர்ட்டிவ் மற்றும் ஆஃப் ரோடு ஆகும்.
மூன்று விதமான ரைட் ஆப்ஷன் உள்ளது. அவை ரோடு , ஆஃப் ரோடு மற்றும் நம் விருப்பமான ரைட் ஆப்ஷன்.
ட்ரையம்ஃப் டைகர் XR பைக் |
முன்புறத்தில் 17 இஞ்ச் ஆலாய் வீல் மற்றும் பின்புறத்தில் 19 இஞ்ச் ஆலாய் வீலை கொண்டுள்ளது. இருக்கையின் உயரத்தை 20மிமீ வரை மாற்றி அமைத்து கொள்ளமுடியும்.
ட்ரையம்ஃப் டைகர் XR பைக் விலை ரூ.10.50 லட்சம் (ex-showroom Delhi)
Triumph Motorcycle Tiger XR adventure launched in India