இந்தியாவில் டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக் அட்வென்ச்சர் ரக பைக் மாடலை ரூ.17.44 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வரிசை பைக்குகளில் டூரிங் ரக மோட்டார்சைக்கிள்கள் மல்டிஸ்ட்ராடா 1200 மற்றும் 1200 S மாடல்கள் விற்பனையில் உள்ள கூடுதலாக விற்பனைக்கு வந்துள்ள மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ மிக சிறப்பான அட்வன்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.
ஆல் டெர்ரெயின் ஆப்ஷனுடன் மிக சிறப்பான ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடுஅனுபவத்தினை வழங்கவல்ல மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக்கில் 160 hp ஆற்றல் வெளிப்படுத்தும் 1198.4cc டெஸ்டேஸ்ட்ரெட்டா டிவிடி (Testastretta DVT -Desmodromic Variable Timing) L- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 136 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
எண்ணற்ற வசதிகளை பெற்றுள்ள இந்த பைக்கில் ஸ்போர்ட், அர்பன் , டூரிங் மற்றும் என்டியூரோ என 4விதமான டிரைவிங் மோட் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப் லைட் கார்னரிங் வசதியுடன் , 5 இன்ச் கலர் இன்ஸ்டூருமென்ட் பேனல் , மல்டிமீடியா சிஸ்டம் பூளுடூத் வசதி , டுகாட்டி டிராக்ஷ்ன் கன்ட்ரோல், ஏபிஎஸ் என பலவற்றை பெற்றுள்ளது.
முன்பக்க டயர் 19 இன்ச் வீல் பின்பக்க டயர் 17 இன்ச் வீல் பெற்று 30 லிட்டர் எரிபொருள் கலன் வாயிலாக 450 கிமீ வரை பயணிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 என்டியூரோ பைக் விலை ரூ.17.44 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)
டெல்லி , மும்பை ,புனே மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள டுகாட்டி டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.