gixxer black /red |
நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துவரும் சுஸூகி ஜிக்ஸெர் நேக்டு பைக்கில் புதிய வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றமுமில்லை.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரட்டை வண்ண கலவையில் உள்ள நிறங்கள் கருப்பு நிறத்துடன் இணைந்த சிவப்பு வண்ணம் மற்றும் வெள்ளை நிறுத்துடன் இணைந்த நீலம் நிறத்திலும் இருக்கும்.
ஜிக்ஸெர் பைக்கில் 14பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 154.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் மைலேஜ் லிட்டருக்கு 64கிமீ ஆகும்.
சுஸூகி ஜிக்ஸெர் பைக் விலை விபரம் (சென்னை ஆன்ரோடு மற்ற மாவட்டங்கள் )
இரட்டை வண்ண கலவை – ரூ.88,283 (சென்னை) ரூ.88,261 (தமிழகம்)
ஒற்றை வண்ணம் ரூ. 87,160 (சென்னை) ரூ. 87,139 (தமிழகம்)
முன்பதிவுக்கு GIXXER’ to 56070 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்.
Suzuki Gixxer gets new dual tone edition