கவாஸ்கி நின்ஜா 300 பைக் விரைவில் வெளிவரவுள்ளது. கவாஸ்கி நின்ஜா 250 பைக்கிற்க்கு மாற்றாக நின்ஜா 300 விற்பனைக்கு வரலாம். நின்ஜா 250 பைக்கினை விட மேம்படுத்தப்பட்டதாக விளங்கும்.
கவாஸ்கி நின்ஜா 300 பைக்கில் இசட்எக்ஸ்-10ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட முகப்பு விளக்குகள், ப்ளோட்டிங் வைஸர், மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மேலும் இன்ஜின் வெப்பம் ரைடரை தாக்காமல் இருப்பதற்க்காக ரேடியேட்டர் ஃபேன் மற்றும் வென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
296 சிசி பேரலல் டிவின் மற்றும் திரவ குளிர்வித்தல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 36 பிஎச்பி @ 11,000rpm ஆகும். மிகவும் பவர்ஃபுல்லான எஞ்சினாக விளங்கும்.6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயனபடுத்தியுள்ளனர்.
முன் மற்றும் பின்பறம் டிஸ்க் பிரேக் பயன்படுத்தியுள்ளனர். இந்த பைக் வெளிவந்தவுடன் நின்ஜா 250 பைக் விற்பனை நிறுத்தப்படலாம் என எதிர்பார்கின்றனர். விலை விபரங்கள் கிடைக்கவில்லை.வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரலாம்.