கவாஸாகி KLX 110 ஆஃப் ரோடர் பைக் ரூ.2.65 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறுவர்களுக்கான கவாஸாகி KLX 110 பைக் பொது போக்குவரத்து சாலையில் இயக்க முடியாது.
கேஎல்எக்ஸ் 110 பைக்கினை பொது போக்குவரத்து சாலையில் இயக்க அனுமதியில்லை. டிராக்குகள் மற்றும் ஆஃப்ரோடர் அனுபவத்தினை தரவல்ல இடங்களில் மட்டுமே இயக்க முடியும்.
4 வேக ஆட்டோமேட்டிக் கிளட்ச் கொண்ட கியர்பாக்சினை பெற்றுள்ள 112சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருபுறங்களில் டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.
26.8 இஞ்ச் உயரம் மட்டுமே கொண்டுள்ள இருக்கை சிறுவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் பெற்றோர்களின் கண்காணிப்பில் கேஎல்எக்ஸ் 110 ஆஃப் ரோடர் பைக்கினை இயக்கலாம்.
1560மிமீ நீளம் 650மிமீ அகலம் மற்றும் 955மிமீ உயரம் கொண்டுள்ளது. மேலும் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 216மிமீ மற்றும் வீல் பேஸ் 1074மிமீ ஆகும். இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 3.8 லிட்டர் ஆகும். கேஎல்எக்ஸ் 110 பைக் லைம் கீரின் வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.
கவாஸாகி KLX 110 பைக்கின் விலை ரூ.2.65 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி )