Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் யமஹா ஆர்3 பைக் நீக்கம் ஏன் ?

by MR.Durai
11 April 2017, 2:58 pm
in Bike News
0
ShareTweetSend

இந்திய சந்தையிலிருந்து யமஹா ஆர்3 ஸ்போர்ட்டிவ் பைக் டாடல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பி.எஸ் 4 நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து பி.எஸ் 3 எஞ்சினை பெற்றிருந்த ஆர்3 மாடல் நீக்கப்பட்டுள்ளது.

 யமஹா ஆர்3 பைக்

  • ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் ஐ தர மாசு விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
  • இந்தியா யமஹா இணைய பக்கத்திலிருந்து YZF-R3 பைக் நீக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் பி.எஸ் 4 எஞ்சினுடன் வரவுள்ளது.

ஆர்3 பைக் மாடலில் 41.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.  டைமன்ட் டைப் பிரேம் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , 7 விதமான அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட மோனோ- சாக்அப்சார்பர் பின்புறத்தில் உள்ளது.

ஏப்ரல் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ் 4 நடைமுறையை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் அதிரடி தடை விதித்ததை தொடர்ந்து மாபெரும் சலுகை விலையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது.

தற்காலிகமாக இந்திய சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள யமஹா ஆர்3 அடுத்த சில மாதங்களுக்குள் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற மாடலாக கூடுதலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏப்ரல் 1, 2017 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களும் பி.எஸ் 4 எஞ்சின் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை பெற்றிருக்கும்.

Related Motor News

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்

Tags: Yamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan