மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு இன்ஜினுடன் கூடுதல் வசதிகள் மற்றும் ஏஹெச்ஒ போன்றவற்றுடன் ஹோண்டா ஆக்டிவா 4G ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது. உலகில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற தானியங்கி ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா விளங்குகின்றது.
ஆக்டிவா 4G
2000ம் ஆண்டு முதல் சந்தையில் உள்ள ஆக்டிவா மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் கொடிகட்டி பறக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகளின் விபரம் இதோ…!
- புதிய தோற்றத்தை வழங்கும் முன்பக்க பாடிகவர்
- நிறங்கள் – மேட் சில்வர் மெட்டாலிக் மற்றும் மேட் கிரே மெட்டாலிக்
- ரீடிராக்டெபிள் ஃபிரென்ட் ஹூக் மற்றும் மொபைல் சார்ஜர் சாக்கெட்
- ஏஹெச்ஒ எனப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதி
- பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைக்கு ஏற்ற 110சிசி என்ஜின்
ஹோண்டாவின் ஆக்டிவா 4G ஸ்கூட்டரில் 109சிசி ஹோண்டா இகோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 9Nm ஆகும். காம்பி பிரேக் சிஸ்டத்துடன் இணைந்துள்ள ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விளங்குகின்றது.
மேட் சில்வர் மெட்டாலிக் , மேட் கிரே மெட்டாலிக் போன்ற புதிய நிறங்களுடன் நீலம் மெட்டாலிக், சிவப்பு மெட்டாலிக், கருப்பு, வெள்ளை மற்றும் பிரவுன் மெட்டாலிக் போன்ற 7 வண்ணங்களுடன் ஆக்டிவா ஸ்கூட்டர் கிடைக்க உள்ளது.
புதிய ஆக்டிவா 4ஜி விலை
புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 4G விலை ரூ.50,730 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)