கடந்த ஆண்டு ஃபேசர் எஃப்ஐ மற்றும் எஸ்இசட் எஃப்ஐ பைக்கில் இந்த புதிய பூளூ கோர் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்பொழுது ரே , ரே இசட் மற்றும் ஆல்ஃபாவிலும் நுட்பத்தினை கொண்டு வந்துள்ளது.
பூளூ கோர் நுட்பத்தின் மூலம் முந்தைய மைலேஜினை விட கூடுதலாக லிட்டருக்கு 4கிமீ வரை அதிகரித்துள்ளது. முந்தைய மைலேஜ் லிட்டருக்கு 62கிமீ தற்பொழுது ரே , ரே இசட் மற்றும் ஆல்ஃபா ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 66கிமீ ஆகும்.
பூளூ கோர் என்ஜின் நுட்பத்தின் தனித்தன்மை என்னவென்றால் எரிபொருளை சிறந்த முறையில் முழுமையாக எரிய செய்வது , என்ஜின் உராய்வினால் ஏற்படும் இழப்பினை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
113சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய நிக்கல் ஸ்பார்க் பிளக் பொருத்தியுள்ளனர்.
2015 ரே மாடலில் புதிய வண்ணங்கள் சேர்க்கப்படவில்லை ஆனால் ரே இசட் மாடலில் புதிய சியன் ஸ்பிளாஷ் வண்ணம் மற்றும் ஆல்ஃபா மாடலில் கோல்டு வண்ணத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.
புதிய விலை விபரம்
யமஹா ரே — ரூ. 47,805
யமஹா ரே இசட் — ரூ. 48 ,936
யமஹா ஆல்ஃபா — ரூ .49,939