மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரில் புதிய Hx வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. கஸ்ட்டோ Hx ஸ்கூட்டர் விலை ரூ. 49,000 ஆகும்.
விற்பனையில் உள்ள டிஎக்ஸ் பேஸ் மாடல் மற்றும் இசட்எக்ஸ் டாப் மாடலுக்கு இடைப்பட்ட நிலையில் எச்எக்ஸ் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. ரிமோட் ஃபிளிப் கீ மற்றும் ஃபைன்ட் மீ விளக்கு போன்றவை டிஎக்ஸ் மற்றும் எச்எக்ஸ் வேரியண்டில் இல்லை. இந்த வசதிகள் டாப் மாடலான இசட்எக்ஸ் வேரியண்ட்டில் மட்டுமே உள்ளது.
கஸ்ட்டோ ஸ்கூட்டரில் 109.6 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் முறுக்கு விசை 9எனெம் ஆகும்.
கஸ்ட்டோ ஸ்கூட்டர் விலை (ex-showroom mumbai)
கஸ்ட்டோ Dx – ரூ.47, 000
கஸ்ட்டோ Hx – ரூ.49, 000
கஸ்ட்டோ Zx – ரூ.51, 000