ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல் பாகங்களில் உருவாக்கப்பட்டுள்ள பஜாஜ் வி15 பைக் பற்றி முக்கிய விபரங்கள் மற்றும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பஜாஜ் வி15 பைக் விலை ரூ.70,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பஜாஜ் V15 முக்கிய விபரங்கள் ;
- பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய வி15 பைக் கிளாசிக் டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஐஎன்எஸ் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல் பாகத்திலிருந்து பெட்ரோல் டேங் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
- கஃபே ரேஸர் மற்றும் க்ரூஸர் பைக்குகளின் வடிவ தாத்பரியத்தின் கலவையில் நியோ – கிளாசிக் டிசைன் என பஜாஜ் ஆட்டோவால் அழைக்கப்படுகின்றது.
- பஜாஜ் வி15 பைக் ஆன்ரோடு விலை ரூ.68,000 முதல் ரூ.70,000 வரையிலான விலையில் இருக்கலாம்.
- பஜாஜ் V15 பைக்கிற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்கள் வாயிலாகவும் முன்பதிவு நடைபெறுகின்றது.
- 12 PS ஆற்றலை வழங்கும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13 Nm ஆகும்.
- பஜாஜ் வி15 பைக் மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ வரலாம் என தெரிகின்றது.
- 33மிமீ அகலம் கொண்ட முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் இரு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது.
- மற்ற 150சிசி பைக்குகளை விட 60 சதவீத கூடுதல் வெளிச்சம் தரவல்ல 60 W முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.
- முன்பக்கம் 18 இஞ்ச் வீல் பின்புறம் 16 இஞ்ச் வீல் ஆகும்.
- பின்புற இருக்கையை ஒற்றை மற்றும் இருவர் அமரும் இருக்கையாக மாற்றிக்கொள்ளலாம்.
- வரும் மார்ச் மத்தியில் டெலிவரி தொடங்கப்படலாம்.
பஜாஜ் V15 பைக் படங்கள்
[envira-gallery id=”5741″]