கடந்த டிசம்பர் 2016ல் விற்பனைக்கு வந்த பஜாஜின் டோமினார் 400 ஸ்போர்ட்டிவ் க்ரூஸர் பைக் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பைக்கின் விலை ரூபாய் 2 ஆயிரம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் உயர்ந்துள்ளது.
டோமினார் 400 விலை
- டோமினார் 400 பைக் ஆரம்ப விலை ரூ. 1.40 லட்சம் ஆகும்.
- ஏபிஎஸ் பெற்ற மாடல் விலை ரூ. 1.54 லட்சம் ஆகும்.
- 34.50 hp பவரை வெளிப்படுத்தும் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ந் தேதி இந்திய சந்தையில் விறுபனைக்கு வெளியிடப்பட்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பவர்ஃபுல்லான மாடல் அறிமுகத்தின் பொழுது ரூ. 1.36 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த நிலையில் தற்பொழுது ரூபாய் 2000 வரை வேரியன்ட் வாரியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு மிகுந்த சவலாக விளங்குகின்ற டோமினார் 400 பைக் அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. தொடர்ந்து முன்பதிவில் மிக சிறப்பான எண்ணிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனையில் பெரிதாக பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை.
டோமினார் 400 எஞ்சின் விபரம்
ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன் 34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.
டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
- என்ஜின் – 373cc
- பவர் – 34.5 bhp @ 8000rpm
- டார்க்: 35Nm @ 8500rpm
- கியர்பாக்ஸ் – 6 வேகம்
- எடை – 182 kg
- எரிபொருள் கலன் – 13 லிட்டர்
பஜாஜ் டோமினார் 400 பைக் புதிய விலை பட்டியல்
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.40,660 லட்சம் (டிஸ்க் பிரேக்)
டோமினார் 400 பைக் விலை ரூ. 1.54,910 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)
( தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை )