Categories: Bike News

டுகாட்டி 959 பனிகேல் பைக் விற்பனைக்கு வந்தது

கோவாவில் தொடங்கியுள்ள இந்தியன் பைக் வீக் விழாவில் டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக் ரூ.14.04 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  வரும் ஜூலை முதல் இந்திய சந்தையில் 959 பனிகேல் பைக் கிடைக்கும்.

மிகவும் பிரசத்தி பெற்ற டுகாட்டி 899 பனிகேல் பைக்கின் வெற்றியை தொடர்ந்து அந்த மாடலுக்கு மாற்றாக நடுத்தர ரக சூப்பர் பைக் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 959 பனிகேல் பைக்கில் 157 குதிரை சக்தி வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள பனிகேல் 959 பைக்கிற்கு டெல்லி , குர்கான் , மும்பை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் டுகாட்டி விற்பனையகங்கள் உள்ளது. மேலும் இந்த வருடத்தில் கூடுதலாக சில மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

1299 பனிகேல் பைக்கின் தோற்ற உந்துதலில் மிக சிறப்பான ஸ்டைலிங்கான தோற்றத்துடன் விளங்கும் பனிகேல் 959 பைக்கில் 157 bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 955சிசி L ட்வீன் சூப்பர்குவாட்ரோ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 107 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூரோ 4  மாசு விதிகளுக்கு உட்பட்ட என்ஜினாகும்.

இரட்டை புகைப்போக்கிகள் மிக ஸ்டைலிசானஇரட்டை பிரிவு முகப்பு விளக்குகளுடன் நேர்த்தியாக் முழுதும் அலங்கரிக்கப்பட்ட டுகாட்டி 959 பனிக்கேல் பைக் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

டுகாட்டி 959 பனிக்கேல் பைக் விலை ரூ.14.04 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி)