ஹிமாலயன் ஹைஸ் என்ற பெயரில் டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 ஸ்கூட்டரில் சிறப்பு பதிப்பினை டிவிஎஸ் வெளியிட்டுள்ளது. முதன்முறையாக உலகின் உயரமான மோட்டார் சாலை கார்டுங் லா கணவாய் வழியாக பயனித்த 110சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பைக் ஸ்டன்ட் பென்மணி அனாம் ஹாசிம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 ஸ்கூட்டர் மூலமாக உலகின் மிக உயரமான மோட்டார் சாலையில் 110சிசி ஸ்கூட்டரை இயக்கி கார்டுங் லா கணவாயை கடந்தார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்த சிறப்பு பதிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 சிறப்பு பதிப்பில் இரட்டை வண்ண இருக்கை , ஓக் பேனல்களை கொண்ட இருக்கை அடியில் மற்றும் ஃபுளோர்போர்டு மற்றும் பீஜ் வண்ணம் போன்றவற்றுடன் சிறப்பு பதிப்பு பேட்ஜ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
7.9 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.7Nm ஆகும்.
டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 ஹிமாலயன் ஹைஸ் விலை ரூ.48,561 ( சென்னை எக்ஸ்ஷோரூம்)