இத்தாலியை சேர்ந்த MV அகுஸ்டா S.P.A நிறுவனம் இந்தியாவின் கைனெடிக் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் சூப்பர் பைக்குகள் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் , விற்பனை, சர்வீஸ் உதிரிபாகங்கள் மற்றும் டீலர்களை கைனெடிக் நிர்வகிக்கும்.
எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கில் 144ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1078சிசி 4 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112என்எம் ஆகும். இதில் 6வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கில் 8 விதமான டிராக்ஷன் கட்டுப்பாடு , ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது. எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 265கிமீ ஆகும்.
எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக் விலை ரூ.17.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் புனே)
எம்வி அகுஸ்டா F3 800
எம்வி அகுஸ்டா எஃப்3 800 பைக்கிலும் 8 விதமான டிராக்ஷன் கட்டுப்பாடு , ஏபிஎஸ் போன்றவற்றை நிரந்தர அம்சமாக பெற்றுள்ளது. எம்வி அகுஸ்டா F3 800 பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 269கிமீ ஆகும்.
இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ எம்வி அகுஸ்டா F3 800 ரூ.21 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம்.
” மோட்டார் ராயல் ” என்ற பெயரில் நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் கைனெடிக் டீலர்களை அமைக்க உள்ளது. முதற்கட்டமாக முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. மேலும் பல சூப்பர் பைக்குகளை எம்வி அகுஸ்டா இந்தியா கொண்டு வரவுள்ளது.
எம்வி அகஸ்டா F4 பைக் விலை ரூ.25.50 லட்சம்