அசத்தலான ஸ்போர்ட்ஸ் பைக்ககான கேடிஎம் 390 டியூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.1.80 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஏபிஎஸ் வசதியுடன் வெளிவந்துள்ள கேடிஎம் 390 டியூக் பைக் மிகவும் சிறப்பான ஸ்போர்டிவ் அனுபவத்தினை தரும் என்பதில் எவ்விதமான மாற்றமுமில்லை. கேடிஎம் பைக்கின் டியூக் 200 இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகும் பிரிமியம் பைக் என்ற பெருமையை எட்டியது.
373.2சிசி ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 45பிஎஸ் மற்றும் டார்க் 35என்எம் ஆகும்.
முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.
எம்ஆர்ஃப் மெட்டீலசர் ஸ்போர்டிவ் டயர்கள் தனித்துவமான அம்சமாக விளங்கும் என்பதில் எவ்விதமான ஐயமில்லை. மேலும் பலவிதமான சிறப்பு அம்சங்களுடன் விளங்குகின்றது.
போஸ் நிறுவனத்தின் 9எம்பி டூ சானல் ஏபிஎஸ் நிரந்தரம் அம்சமாக விளங்கும் என்பதால் மிக சிறப்பான பாதுகாப்பினை தரும்.
கேடிஎம் 390 டியூக் பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும்.
கேடிஎம் 390 டியூக் பைக்கின் விலை ரூ.1.80 லட்சம்