மஹிந்திரா குழுமத்தின் அங்கமான கொரியாவின் சாங்யாங் நிறுவனத்தின் சாங்யாங் XAVL எஸ்யூவி கான்செப்ட் டீஸர் படம் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக XAVL கான்செப்ட் பார்வைக்கு வரவுள்ளது.
சாங்யாங் XAVL
வருகின்ற மார்ச் 9ந் தேதி தொடங்க உள்ள 87 ஆம் ஆண்டு 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை மாடல்களும் காட்சிக்கு வரவுள்ளது. சமீபத்தில் சாங்யாங் வெளியிட்டுள்ள எக்ஸ்ஏவிஎல் எஸ்யூவி டீசர் பற்றி பார்க்கலாம்.
முந்தைய ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் வெளிவந்த சிறிய ரக XAV எஸ்யூவி கான்செப்ட் மாடலை அடிப்பையாக கொண்ட XAVL (eXciting Authentic Vehicle Long) கான்செப்ட் மாடலில் 7 இருக்கை ஆப்ஷன்னுடன் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட காராக 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் தலைமுறை கோரான்டோ எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட XAVL மாடலில் நவீன கார் தொடர்புகள் , பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களாக பாதசாரிகள் , ஒட்டுநர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் மாடலாக விளங்கும்.
இந்த கான்செப்ட் காரின் நீளம் 4630மிமீ, அகலம் 1866மிமீ மற்றும் உயரம் 1640மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2775மிமீ ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரவுள்ள இந்த எக்ஸ்ஏவிஎல் கான்செப்ட் எஸ்யூவி இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம்.