வருகின்ற நவம்பர் 7ந் தேதி இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலில் இடம்பெற உள்ள பேரலல்-ட்வீன் 650சிசி எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு 650
750சிசி என எதிர்பார்க்கப்பட்ட மாடல் தற்போது 650சிசி எஞ்சினை பெற்றிருக்கும் என்பதனை உறுதி செய்யும் வகையில் காற்று மற்றும் ஆயில் வாயிலாக குளிர்விக்கும் வகையிலான பேரலல் ட்வீன் 650சிசி எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது 350சிசி சந்தையில் முன்னணி வகிக்கும் என்ஃபீல்டு 500சிசி ஆகிய இரு பிரிவுகளிலும் மிக சிறப்பான பங்களிப்பை சர்வதேச அளவில் பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 650சிசி எஞ்சின் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
எஞ்சின்
1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
வகை | 648 cc, SOHC, air-cooled, parallel-twin |
---|---|
பவர் | 47 bhp at 7,100 rpm |
டார்க் | 52 Nm at 4,000 rpm |
Bore x Stroke | 78 mm x 67.8 mm |
Compression Ratio | 9.5:1 |
கியர்பாக்ஸ் | 6-speed manual |
எரிபொருள் வகை | Fuel Injection |
இக்னிஷன் | Digital Spark Ignition – TCI |
இந்த எஞ்சின் இடம்பெற உள்ள இன்டர்செப்டார் 650 (பெயர் உறுதிசெய்யப்படவில்லை) மாடல் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டுவதுடன், மிக இலகுவாக மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டும் திறன் பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப 10 லட்சத்துக்கு அதிகமான கிலோ மீட்டருக்கு மேலான சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
அறிமுகம்
வருகின்ற நவம்பர் 7ந் தேதி நடைபெற உள்ள 2017 இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் புத்தம் புதிய 650சிசி எஞ்சின் இடம்பெற்ற ராயல் என்ஃபீல்டு பைக் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நேரலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.