எதிர்காலத்தில் நிகழ உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் மற்றும் நவீன நுட்பங்களை பெற்ற மாடலாக ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் எலக்ட்ரிக் கார் தானியங்கி அம்சங்களை பெற்ற மாடலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்கு ஏற்ற வகையில் தானியங்கி நுட்பத்துட்ன் கூடிய மாடலாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைந்திருப்பதுடன் இல்லம், சாலைகள் மற்றும் நகரம் ஆகியவற்றுடன் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
முழுமையான எதிர்கால நுட்பத்தினை பெற்ற மாடலாக வரவுள்ள இந்த காரில் பல்வேறு அம்சங்களுடன் 500 kW (680 PS) ஆற்றல் மற்றும் 660 Nm டார்க்கினை வெளிப்படுத்துவதுடன், 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 6 விநாடிகள் எடுத்துக்கொள்ளும், மேலும் இதில் இடம்பெற்றுள்ள 72 kWh பேட்டரி முழுமையான சார்ஜிங் நிலையில் 500 கிமி பயணிக்கவும், 20 நிமிடத்தில் 80 சதவீத சார்ஜாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு சந்தைக்கு வரக்கூடிய கான்செப்ட் காரின் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.