முதல் டீசரை வெளியிட்டுள்ள ரெனால்ட் நிறுவனம் மின்சாரம் மற்றும் தானியங்கி அடிப்படையிலான கார் கான்செப்ட் மாடலை ரெனால்ட் சிம்பியாஸ் (Symbioz) என்ற பெயரில் வெளியிட உள்ளது.
ரெனால்ட் சிம்பியாஸ் தானியங்கி கார்
எதிர்காலத்தில் வரவுள்ள தானியங்கி கார் மற்றும் பேட்டரியில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள மாடலின் புரோட்டோடைப் கான்செப்ட் மாடலின் முதல் டீஸர் ரெனோ சிம்பியாஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த கான்செப்ட் மாடல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் அடிப்படையில் அர்பன் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் வாகனத்தின் பின் சக்கர அமைப்பின் நேர்த்தியான அலாய் வீல் டிசைன் மற்றும் சி பில்லரின் குறைவான ஹேங்க் பகுதியும் தெளிவாக தெரிகின்றது.
வருகின்ற செப்டம்பர் 12ந் தேதி பிராங்போர்ட்மோட்டார் ஷோ அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு சிம்பியாஸ் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.