இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 25 வது GAIKINDO இந்தோனேசியா ஆட்டோ ஷோ அரங்கில் புதிய மிட்ஷூபிசி எக்ஸ்பேண்டர் எம்பிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 இருக்கைகளை பெற்ற எக்ஸ்பேன்டர் மிக சிறப்பான இடவசதியுடன் கூடியதாக விளங்குகின்றது.
மிட்ஷூபிசி எக்ஸ்பேண்டர் எம்பிவி
இந்திய சந்தையில் மிட்ஷூபிசி நிறுவனம் பஜெரோ ஸ்போர்ட் மற்றும் மான்ட்ரியோ எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வரும் நிலையில் இந்தோனேசியா ஆட்டோ கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள புத்தம் புதிய யுடிலிடி ரக மாடலாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ்பேண்டர் மிக உறுதியான கட்டுமானத்தை பெற்றதாக ஆசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் விற்பனைக்கு கிடைக்க தொடங்க உள்ளது.
சர்வதேச அளவில் விற்பனை செயப்பட்டு வருகின்ற அவூட்லேண்டர் மற்றும் பஜெரோ ஸ்போர்ட் போன்றவற்றுக்கு இணையான முகப்பு அமைப்பினை பெற்றுள்ள எக்ஸ்பேன்டர் மிக நேர்த்தியான எக்ஸ் வடிவ கிரில் அமைப்பினை வெளிப்படுத்தும் வகையிலான தோற்றத்துடன் எல்இடி முகப்பு மற்றும் பனி விளக்குகளை பெற்றுள்ளது.
4.5 மீட்டர் நீளத்தை பெற்றுள்ள இந்த எம்.பி.வி மாடல் 7 இருக்கை வசதியுடன் மிக உயரமான வீல் ஆர்ச் அம்சத்துடன் கூடிய 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ள இந்த காரில் இன்டிரியர் அமைப்பில் இரு வண்ண கலவை அம்சத்துடன் தொடுதிரை அமைப்பினை பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டதாக உள்ளது.
103 bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள மிட்ஷூபிசி எக்ஸ்பேண்டர் மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
இந்தோனேசியா சந்தையில் இன்னோவா , எர்டிகா போன்ற மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த எம்பிவி இந்திய சந்தைக்கு வருகை குறித்து எந்தவொரு அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் இல்லை.