4+1 (பைலட்) என 5 நபர்கள் பயணிக்கும் வகையிலான S-A1 ஏர் டாக்ஸி என்ற கான்செப்ட்டை ஹூண்டாய் மற்றம் உபெர் இணைந்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. S-A1 எலெக்ட்ரிக் டாக்ஸியை மணிக்கு அதிகபட்சமாக 290 கிமீ வேகத்தை பறக்கும் திறனை கொண்டதாக வெளியிட உள்ளது.
இந்த தனிப்பட்ட விமான வாகனத்தை (personal air vehicle – PAV) உருவாக்கியுள்ள ஹூண்டாய் மற்றும் உபெர் கூட்டணி இதனை செங்குத்து முறையில் நேரடியாக டேக்-ஆஃப் மற்றும் தரையிறக்கத்தை செயற்படுத்துவதற்கு புதுமையான வடிவமைப்பு செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது நுகர்வோர் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள S-A1, 180 mph (மணிக்கு 290 கிமீ) வேகத்தில் பயணிக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1,000-2,000 அடி (300-600 மீட்டர்) உயரமும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மைல் (96 கிமீ) வரை பயணிக்கலாம்.
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடுகையில், எஸ் ஏ1 ஆரம்பத்தில் மனிதனால் இயக்கப்படும் முறையிலும், எதிர்காலத்தில் முற்றிலும் தானியங்கி முறையை பெறும் என குறிப்பிடுகின்றது. இது நான்கு பயணிகளை அமர வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடும்போது சத்தத்தை குறைக்கும் முயற்சியில் பல சிறிய ரோட்டர்களை கொண்டுள்ளது.