நாளை முதல் பிராங்பேர்ட் நகரில் தொடங்க உள்ள 87வது பிராங்பேர்ட் மோட்டார் ஷோ கண்காட்சியில் பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்
சாதாரண மாடலை விட மிக சிறப்பான மோட்டார் சவாரி திறனை வெளிப்படுத்தும் வகையில் 140 குதிரை திறன் பெற்ற டர்போசார்ஜ்டு 1.4 பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 230Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஆற்றலை முன்பக்க சக்கரங்களுக்கு கொண்டு செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.
தோற்ற அமைப்பில் சாதாரண மாடலில் இருந்து வித்தியாசப்படும் வகையில் தேன்கூடு கிரில் அமைப்பினை முன்பக்கத்தில் பெற்று 17 அங்குல அலாய் வீல் பெற்று டூயல் எஸ்ஹாஸ்ட் குழாய்கள் ,சைடு ஸ்கிர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் கருப்பு நிறத்தினை பெற்றுள்ள ஸ்போர்ட்டிவ் மாடலில் நேர்த்தியான சிவப்பு இன்ஷர்ட்கள் மற்றும் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவு மிரர் கனெக்ட்டிவிட்டி ஆதரவினை கொண்டுள்ளது.
இந்த காரில் 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், இஎஸ்சி, முன்பக்க மோதலை எச்சரிக்கும் கருவி, டூயல் சென்சார் பிரேக் வசதியுடன் 970 கிலோ எடையை மட்டுமே கொண்டுள்ளது.இது முந்தைய மாடலை விட 80 கிலோ வரை குறைவாகும்.
அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்தியாவில் 2018 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.