பிரபலமான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வருகின்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரவுள்ளது.
தோற்ற அமைப்பில் கவனிக்கதக்க மாற்றங்களை பெற்றுள்ள புதிய ஈக்கோஸ்போர்ட் காரில் முகப்பு தோற்றத்தில் முன்பக்க கிரில் மாற்றத்துட்டன் ,புதிய ஹெட்லேம்ப் , பனி விளக்கு ,கிரில் போன்றவற்றை பெற்றுள்ளது.பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறத்தில் பெரியஅளவிலான மாற்றங்கள் இல்லாமல் உள்ளது. படத்தில் உள்ள காரானது அமெரிக்கா மாடல் என்பதனால் ஸ்பேர் வீல் டெயில்கேட்டில் இடம்பெறவில்லை.
உட்புறத்தில் குறிப்பிடதக்க பல மாற்றங்களை பெற்றுள்ள 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டேஸ்போர்டின் அமைப்பின் தோற்றத்தில் முந்தைய மாடலின் அடிப்படையை கொண்டதாக புதிய இன்ஸ்டூருமென்ட் பேனல் , புதிய சென்ட்ரல் கன்சோல் ,பாடி கலர் இன்ஷர்ட் மற்றும் அசென்ட்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது. மேலும் ஃபோர்டு சிங்க்3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள்கார் பிளே ஆதரவினை பெற வல்லதாக விளங்குகின்றது.
அமெரிக்கா சந்தையில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க உள்ளது.இந்தியாவில் விற்பனையில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்களில் தொடரும். இந்தியாவில் 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.
புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்