வருகின்ற செப்டம்பர் 28ந் தேதி பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவர் எஸ்யூவி காரின் டீசர் படங்களை லேண்ட் ரோவர் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் டிஸ்கவரி எஸ்யூவி விற்பனைக்கு வரலாம்.
வரவுள்ள 5வது தலைமுறை லேண்ட் ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி PLA (Premium Lightweight Architecture) தளத்தினை அடிப்படையாக கொண்ட வடிவ தாத்பரியங்கள் நவீன டிசைன் கோட்பாடுகளுடன் ரேஞ்ச் ரோவர் காரில் உள்ள முன்பக்க சாயலை பெற்று விளங்குகின்றது. வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் முகப்பின் தோற்றம் முழுமையாக வெளிவந்திருந்தாலும் உற்பத்தி நிலை மாடலில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாக விளங்கும் டிஸ்கவரி எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
காரின் இன்டிரியர் அமைப்பிலும் பல குறிப்பிடதக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் மேலும் நவீன தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எண்ணற்ற ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளை பெற்றதாக விளங்கும். விற்பனையில் உள்ள மாடலை விட குறைவான எடை கொண்டதாக இருக்கும் வகையில் அலுமினியம் மோனோக்யூ பாடி அமைப்பினை பெற்றதாக இருக்கும்.
செப்டம்பர் 28 , 2016-ல் சர்வதேச அளவில் பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்படுதவனை தொடர்ந்து விற்பனைக்கு அடுத்த வருடத்தின்தொடக்கத்தில் சர்வதேச நாடுகளில் கிடைக்கும்.