13வது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சி வரும் 2016 பிப்ரவரி 5 முதல் 9 வரை கிரேட்டடர் நொய்டா இந்தியா எக்ஸ்போ மார்ட் மையத்தில் நடைபெற உள்ளது. ஆட்டோ உதிரிபாகங்கள் கண்காட்சி பிரகதி மெய்டனில் 2016 பிப்ரவரி 4 முதல் 7 வரை நடைபெறும்.
கடந்த டெல்லி ஆட்டோ ஷோ கண்காட்சியில் 26 சர்வதேச மாடலகள் , 44 இந்திய மாடல்கள் , 200க்கு மேற்பட்ட இருசக்கர , மூன்றுசக்கர மாடல்கள் , யுட்டிலிட்டி ,வர்த்தக வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சராசரியாக தினமும் 1 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் அதிக பார்வையாளர்கள் வரவுள்ளனர்.
கடந்த ஆட்டோ உதிரிபாகங்கள் கண்காட்சியில் 1100 தயாரிப்பாளர்கள் மற்றும் 500க்கு மேற்பட்ட புதிய நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சராசரியாக தினமும் 70,000 பார்வையாளர்களை பெற்றது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 பிப்ரவரி 5 முதல் 9 வரை
ஆட்டோ உதிரிபாகங்கள் கண்காட்சி 2016 பிப்ரவரி 4 முதல் 7 வரை
2016 Auto Expo dates