பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரில் 631ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலாக புதிய ஹூராகேன் விளங்குகின்றது.
லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி
2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடலில் 5.2 லிட்டர் வி10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் 631 hp பவர் மற்றும் 600 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் பவரை சக்கரங்களுக்கு 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும்.
இலகு எடை மற்றும் உயர்தர பலமிக்க கார்பன் ஃபைபர் கம்போசிட் உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த காரில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வடிவத்தை செயல்பாட்டினை கொண்டதாக விளங்குகின்றது. மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டில் டிஜிட்டல் காக்பிட் திரையுடன் பல்வேறு விதமான ஆப்ஷன்களுடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ பொன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளது.
அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி இந்தியாவில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் கார் படங்கள்
ஹூராகேன் பெர்ஃபாமென்டி காரின் 18 படங்கள் இணைப்பு
[foogallery id=”17422″]