மெக்லாரன் F1 முன்னாள் டிசைனர் முராய் மற்றும் டொயோட்டா முன்னாள் டிசைனர் தெசி நாகாய போன்ற வடிவமைப்பாளர்களின் ஐஸ்டீரிம் கார்பன் அடிசட்ட தயாரிப்பு நுட்பங்களை கொண்டு யமஹா ஸ்போர்ட் ரைட் ஸ்போர்ட்டிவ் கார் டோக்கியா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்துள்ளது.
ஐஸ்டீரிம் கார்பன் அடிசட்டத்தினால் உருவாக்கப்பட உள்ள ஸ்போர்ட் ரைட் கார் குறைவான எடை மற்றும் சிறப்பான உறுதி தன்மை மேலும் உலகின் மிக மலிவான விலை கொண்ட கார்பன் ஃபைபர் அடிசட்டமாக விளங்கும். இந்த காரில் ஃபார்முலா 1 காரின் நுட்பங்கள் பெருமளவில் பயன்படுத்த உள்ளனர்.
கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளதால் ஸ்போர்ட் ரைட் காரின் எடை வெறும் 750கிலோ மட்டுமே இருக்கும். இந்த காரில் எந்த மாதிரியான என்ஜின் பொருத்தப்பட உள்ளது போன்ற தகவல்களை யமஹா வெளியிடவில்லை. ஸ்போர்ட் ரைட் காரில் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்த வாய்ப்புகள் உள்ளது.
Yamaha Sport Ride car |
: Yamaha Sport Ride car concept Revealed at Tokyo motor show