மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய விஷன் மினிவேன் கான்செப்ட் டீசரை வெளியிட்டுள்ளது. விஷன் மினிவேன் கான்செப்ட் வரும் டோக்கியா மோட்டார் ஷோ கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.
வருங்கால தலைமுறைக்கு ஏற்ற மினிவேனாக விளங்கும் இந்த கான்செப்ட் சிறப்பான செயல்திறன் , சொகுசு வசதிகளை கொண்ட தானியங்கி காராக விளங்கும் என தெரிகின்றது.
இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள 44வது டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த மாடல் காட்சிக்கு வரவுள்ளது. மேலும் பல புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி மாடல்களை பல நிறுவனங்கள் பார்வைக்கு கொண்டு வரவுள்ளது.
New Mercedes-Benz Vision Minivan Concept