சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்ட சுஸூகி ஸ்விஃப்ட் ரேஸர் RS மாடல் 2017 டோக்கியா ஆட்டோ சலூன் அரங்கில் சுஸூகி ரேஸ் பிரிவு அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ஜப்பானிய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட புதிய ஸ்விஃப்ட் மாடலில் ஸ்போர்ட்டிவ் வேரியன்ட் வந்துள்ளது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில் சுசூகி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பிரிவான டீம் சுஸூகி எக்ஸ்டார் (Team Suzuki Ecstar) ரேஸர் மாடலாக மாற்றியுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்தின் மத்தியில் புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியா வருகை
ஜப்பானிய சந்தையில் இருவிதமான ஆற்றல் வேறுபாட்டில் கிடைக்கின்ற ஸ்போர்ட்டிவ் ஆர்எஸ் மாடல் இந்தியாவில் ஒரு என்ஜினுடன் மாருதி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்விஃப்ட் மாடலுக்கு முன்னதாக டிசையர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
சுசூகி ஸ்விஃப்ட் ரேஸர் ஆர்எஸ் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா என்பது குறித்து எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.
அசத்தலான ஸ்விஃப்ட் ஆர்எஸ் காரின் 20 படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
[foogallery id=”15533″]
image source – carwatch