Fiat Aegea concept Revealed |
இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷனில் எகயா கார் வரும் நவம்பர் மாதம் துருக்கி சந்தையில் விற்பனைக்கு வருகின்றது.அதனை தொடர்ந்து 40க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வருகின்றது.
4.5 மீட்டர் நீளமும் , 1.78 மீட்டர் அகலமும் மற்றும் 1.48 மீட்டர் உயரம்கொண்ட ஃபியட் ஏகியா காரின் வீல்பேஸ் 2.64மீட்டர் ஆகும். மிகவும் சிறப்பான கட்டமைப்பு ஸ்போர்டிவ் தோற்றத்தினை கொண்டுள்ளது. முன்புறத்தில் உள்ள கிரில் மிக நேர்த்தியாக உள்ளது. பின்புறத்தில் உள்ள நிறுத்த விளக்குகள் மற்றும் டெயில்கேட்டில் குரோம் பூச்சு பட்டை தந்துள்ளனர்.
உட்புறத்தில் கருப்பு வண்ணத்தில் ஃபினிஷ் செய்துள்ளனர். 5 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ,பூளூடூத் , யூஎஸ்பி தொடர்பு ,ஆக்ஸ் இன் இணைப்பு ,என பல அமசங்களை கொண்டுள்ளது.
விற்பனைக்கு வரும்பொழுது வேறு ஒரு பெயரில் விற்பனைக்கு வருமாம். வரும் நவம்பர் மாதம் துருக்கியில் விற்பனைக்கு வரவுள்ள ஏகியா இந்தியாவில் லீனியா காருக்கு மாற்றாக 2016ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.